Friday, November 28, 2014

யூ பார்த்து வெறுத்து போன ரசிகர்களுக்காக ஏ படம் எடுக்கிறேன் இயக்குனர் துணிச்சல் !!!




சென்னை: ‘அம்முவாகிய நான் பட இயக்குனர் பத்மா மகன் இயக்கும் புதிய படம், ‘நேற்று இன்று. இப்படத்துக்காக டைட்டில் முதல் சென்சார் வரை பட்ட பாட்டை கூறினார்.தலைமறைவாக காட்டுக்குள் இருக்கும் ஒருவனை பிடிக்க ஒரு குழு காட்டுக்குள் செல்கிறது. அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் கதை. படம் தணிக்கைக்கு சென்றது. ஏ சான்று கொடுத்தார்கள். ஏற்று கொண்டேன். யூ படம் பார்த்து பார்த்து போரடித்து போன ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் இருக்கும். முதலில் படத்துக்கு ‘கூத்து என பெயர் வைத்தேன். அதற்கு உரிமை கோரி ஒருவர் வழக்கு போட்டார். டைட்டில் உரிமை தருவதற்கு நிறைய பணம் கேட்டார். தர மறுத்து, ‘நேற்று இன்று என்று டைட்டிலை மாற்றினேன். பிரசன்னா, விமல், நந்தகி, அருந்ததி நடிக்கின்றனர்.இப்படத்துக்காக 2 யானைகளை நடிக்க அழைத்து வந்தேன். வாடகையாக ரூ.5 லட்சம் கேட்டார்கள். தந்தேன். காட்சி முடித்த பிறகு ஒரு யானைக்கு மட்டும் லைசென்ஸ் தந்தார்கள். வேறு வழியில்லாமல் இன்னொருயானை நடித்த காட்சியை படத்தில் இருந்து நீக்கினேன். அதேபோல் ஐதராபாத்தில் இருந்து பெல்லி டான்ஸ் ஆட நடிகையை அழைத்து வந்து பாடல் படமாக்கினேன். கடைசியில் அந்த பாடல் நீக்கப்பட்டது. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12991&id1=7#sthash.R2MqTMbN.dpuf

No comments:

Post a Comment