நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். பெரிய நடிகர்களுடனும் பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்கிறார். இதனால் கர்வத்தில் இருப்பதாகவும் சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து அனுஷ்கா கூறியதாவது:– |
நான் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடிசேரும் அளவுக்கு சினிமாவில் உயர்ந்து விட்டேன். ருத்ரமாதேவி, பாகுபலி போன்ற சரித்திர படங்களிலும் நடிக்கிறேன். |
புகழ், பணம் சேர்ந்தாலும் நான் மாறமாட்டேன். கர்வம், அகங்காரம், பொறாமை இந்த மூன்றையும் எப்போதும் என்னுடன் சேர்த்ததே இல்லை. |
சினிமாவில் நிறைய வெற்றிகளை குவித்து இருக்கிறேன். ஆனாலும் நான் உயரத்தில் பறக்கவில்லை. என்கால்கள் தரையில் தான் இருக்கிறது. |
சினிமாவில் கிடைத்த புகழ், பணம் இரண்டும் என் வாழ்க்கையை மாற்றிவிடவில்லை. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அதே போல்தான் இப்போதும் இருக்கிறேன். |
எனக்கு தலைக்கனம் வரவில்லை. சினிமாவில் நான் சிறந்த டான்சர் கிடையாது. பிரமாதமான நடிகையும் இல்லை. ஆனாலும் கேமரா முன்னால் போய் விட்டால் நூறு சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் கடுமையாக உழைக்கிறேன். ஒவ்வொருத்தர் கிட்டயும் நிறைய கற்றுக் கொள்கிறேன். லைட்பாயிடம் இருந்து கற்றுக் கொள்வதில் கூட தயக்கம் காட்டுவது கிடையாது. இதனால்தான் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு இருக்கிறேன். |
ரஜினியுடன் நடித்த ‘லிங்கா’ படம் அடுத்த மாதம் டிசம்பர் 12–ந்தேதி ரிலீசாக இருக்கிறது. அந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். |
Welcome To Cine Junction. cine junction is your best source for sneak previews, conversation, guided tours to film festivals, and reviews!!!!!
Wednesday, November 26, 2014
புகழ், பணம் குவிந்தாலும் நான் மாறமாட்டேன்: அனுஷ்கா!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment