ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்திருக்கும் 'ஐ' இறுதிகட்டப் பணிகள் முடிந்து பொங்கல் 2015 அன்று வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
'ஐ' பட்ஜெட் அதிகம் என்பதால், அதிக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருக்கிறது ஆஸ்கர் நிறுவனம். ஆனால், டிசம்பரில் 'லிங்கா' வெளியாக இருப்பதால் அதிக திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.
செப்டம்பர் மாதம் இசை வெளியீடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தான் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. DI, பின்னணி இசை, இதர மொழிகளின் டப்பிங் என வெவ்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதும் தாமதத்திற்கு ஒரு காரணம்.
'ஐ' படத்தில் கூன் விழுந்து வரும் விக்ரம் கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது.
அப்பாத்திரத்திற்காக விக்ரம் அதிக சிரமப்பட்டு பேசி வருகிறார். அதுவும் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் அவரே டப்பிங் பேசி வருவதும் ஒரு காரணம்..
No comments:
Post a Comment