Tuesday, November 25, 2014

''யு'' சான்றிதழ் பெற்றது ''லிங்கா'' : டிச. 12-ல் வெளியாகிறது!!!!




கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'லிங்கா'
 படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்தனர்.
ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா, சந்தானம் உள்ளிட்ட
 பலர் நடிப்பில் உருவாகி உள்ளது 'லிங்கா' படம். கே.எஸ்.ரவிகுமார்
 இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் ஈராஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருமே
 டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று கூறினாலும், இயக்குநர்
ரவிகுமார் மட்டும் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது
 என்று கூரினார். அப்பணிகள் முடிந்து சென்சார் ஆனவுடன்
தான் வெளியீட்டு தேதி கூறமுடியும் என்று தெரிவித்தார்.
 இந்நிலையில் 'லிங்கா' பணிகள் முடிந்து சென்சாருக்கு
 அனுப்பி இருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது. நேற்று
இரவு 'லிங்கா' படத்தின் சென்சார் பணிகள் அனைத்தும்
 முடிந்து 'யு' சான்றிதழ் கிடைத்தது!!!!

No comments:

Post a Comment