Welcome To Cine Junction. cine junction is your best source for sneak previews, conversation, guided tours to film festivals, and reviews!!!!!
Thursday, December 4, 2014
Sunday, November 30, 2014
ரூ.10 கோடி தர மறுப்பு: கோச்சடையான் தயாரிப்பாளர் முரளிமனோகர், லதா ரஜினிகாந்த் மீது விநியோகஸ்தர் புகார்!!!
திரைப்பட விநியோகஸ்தர் அபிர்சந்த் நாகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: |
| நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இப்படத்தின் தமிழக உரிமையை அதன் தயாரிப்பாளர் முரளி மனோகர், கடந்த ஏப்ரல் 25-ம் தேதி எனது நிறுவனத்துக்கு அளித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் நானும், முரளி மனோகரும் கையெழுத்திட்டோம். இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்திட்டார். |
| அதைத் தொடர்ந்து ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் தமிழக உரிமத்துக்குரிய தொகையை முரளி மனோகருக்கு நான் கொடுத்தேன். “தமிழகத்தில் ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் உரிமையை வேறு யாருக்கும் அளிக்கக்கூடாது. அதைமீறி யாருக்காவது உரிமை அளித்தால், எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அதாவது விற்பனைத் தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும்” என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| ஆனால், அந்த ஒப்பந்ததை மீறி வேறு ஒரு நிறுவனத்துக்கு அனைத்து உரிமைகளையும் முரளி மனோகர் விற்றார். இதையடுத்து நான் அவர்களிடம் எனக்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்டேன். அதற்கு லதா ரஜினி காந்தும், முரளி மனோகரும் படம் வெளியானதும் அந்தத் தொகையைத் தருவதாக என்னிடம் உறுதி அளித்தனர். நம்பிக்கையின் அடிப்படையில் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தேன். ஆனால் படம் வெளியாகி ஓடி பல மாதங்கள் கடந்த பின்னரும், அவர்கள் எனக்குத் தர வேண்டிய ரூ. 10 கோடியைத் தரவில்லை. |
| பலமுறை கேட்டும், பணத்தைத் தராமல் இழுத்தடிக் கின்றனர். எனவே லதா ரஜினிகாந்த், முரளி மனோகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும். |
Friday, November 28, 2014
Sonam Kapoor is Bollywood's hungry young woman!!!!
Actress Sonam Kapoor seems to have taken inspiration from Bollywood's angry young man title, but with a twist. The actress has given herself a new tag - Bollywood's 'hungry young woman' - as she transforms into a different person when she is hungry. |
| "Hunger changes you and anyone who has crossed paths with a hungry me can testify to that. I am a totally different person when I am hungry, and become Bollywood's 'hungry young woman'," the actress said in a statement. |
| The actress has taken over an advertisement for Snickers, a chocolate brand of Mars International India, from actresses Rekha and Urmila Matondkar. She features in a campaign advertisement named "You're Not You When You Are Hungry", which will beam Nov 29. |
| In the advertisement, the daughter of veteran actor Anil Kapoor will portray the hunger-induced 'personality change' in a quirky way. |
| The "Khoobsurat" actress says one of the reasons to be associated with the brand is the attraction of "unlimited supply of chocolates" it promises. |
| "I am thrilled to be part of this campaign and look forward to the association and to an unlimited supply of chocolates, " she said. |
| On the big screen, Sonam will next be seen in "Dolly Ki Doli" and "Prem Ratan Dhan Payo". |
Delhi lucky for Deepika Padukone!!!!
| Deepika Padukone is shooting in Delhi for her upcoming film,
Piku. The ace actor has been enjoying shooting in the city. |
| Delhi has been lucky for Deepika with two of her most loved films - Love Aaj Kal and large parts of Cocktail being shot there. Both the films had done very well at the box office and have won her appreciation and accolades. |
| While she is back in the city to shoot Piku, Deepika is enjoying the experience in Delhi. By now she has a fair understanding of the city and has also been going out to explore as and when possible. Deepika has also been tasting the food in Delhi. Deepika loves the chaats and has been asking the unit for recommendations and indulging in the same. In spite of having a hectic shooting schedule, Deepika has thoroughly been enjoying herself in the capital. |
யூ பார்த்து வெறுத்து போன ரசிகர்களுக்காக ஏ படம் எடுக்கிறேன் இயக்குனர் துணிச்சல் !!!
சென்னை: ‘அம்முவாகிய நான் பட இயக்குனர் பத்மா மகன் இயக்கும் புதிய படம், ‘நேற்று இன்று. இப்படத்துக்காக டைட்டில் முதல் சென்சார் வரை பட்ட பாட்டை கூறினார்.தலைமறைவாக காட்டுக்குள் இருக்கும் ஒருவனை பிடிக்க ஒரு குழு காட்டுக்குள் செல்கிறது. அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் கதை. படம் தணிக்கைக்கு சென்றது. ஏ சான்று கொடுத்தார்கள். ஏற்று கொண்டேன். யூ படம் பார்த்து பார்த்து போரடித்து போன ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் இருக்கும். முதலில் படத்துக்கு ‘கூத்து என பெயர் வைத்தேன். அதற்கு உரிமை கோரி ஒருவர் வழக்கு போட்டார். டைட்டில் உரிமை தருவதற்கு நிறைய பணம் கேட்டார். தர மறுத்து, ‘நேற்று இன்று என்று டைட்டிலை மாற்றினேன். பிரசன்னா, விமல், நந்தகி, அருந்ததி நடிக்கின்றனர்.இப்படத்துக்காக 2 யானைகளை நடிக்க அழைத்து வந்தேன். வாடகையாக ரூ.5 லட்சம் கேட்டார்கள். தந்தேன். காட்சி முடித்த பிறகு ஒரு யானைக்கு மட்டும் லைசென்ஸ் தந்தார்கள். வேறு வழியில்லாமல் இன்னொருயானை நடித்த காட்சியை படத்தில் இருந்து நீக்கினேன். அதேபோல் ஐதராபாத்தில் இருந்து பெல்லி டான்ஸ் ஆட நடிகையை அழைத்து வந்து பாடல் படமாக்கினேன். கடைசியில் அந்த பாடல் நீக்கப்பட்டது. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12991&id1=7#sthash.R2MqTMbN.dpuf |
Wednesday, November 26, 2014
காங்கிரஸில் இணைந்தார் நடிகை குஷ்பு; சோனியாவுடன் சந்திப்பு!!!
சென்னை: நடிகை குஷ்பு, சோனியா காந்தியை இன்று மாலை டெல்லியில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். |
| திமுக முக்கிய பேச்சாளராக விளங்கிய நடிகை குஷ்பு, குறுகிய காலத்தில் அக்கட்சியின் முன்னணி பிரசார பிரமுகராக வலம் வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அக்கட்சியிலிருந்து திடீரென விலகினார். |
| தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றி குஷ்பூ தனது கருத்தை சுதந்திரமாக வெளியிட்டதால் ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து திமுகவில் இருந்து விலகினார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன், நடிகை குஷ்பு பா.ஜ.க.வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை குஷ்பு மறுத்திருந்தார். |
| சோனியாவுடன் சந்திப்பு |
| இந்நிலையில், நடிகை குஷ்பு சற்றுமுன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது அவரது முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். |
| இதனை குஷ்புவுடன் சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். |
| தமிழக காங்கிரஸில் ஓரளவு தொண்டர்கள் செல்வாக்கு உள்ளவராக திகழ்ந்த ஜி.கே. வாசன், அக்கட்சியிலிருந்து விலகிவிட்ட நிலையில், அக்கட்சியில் மக்கள் செல்வாக்கு உள்ள 'மாஸ் லீடர்' என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை. |
| இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை குஷ்பு மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்றே கூறவேண்டும். அதே சமயம் குஷ்புவை பார்க்கவும், அவரது பேச்சை கேட்கவும் திரளும் கூட்டம் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வாங்கித்தருமா? என்பதை எதிர்கால தேர்தல் முடிவுகள்தான் சொல்லும். |
Subscribe to:
Posts (Atom)




